அவ்லியாவின் ஆசி பெற டிஸ்கோ நடன நிகழ்ச்சிகள்.
திருவாரூர் மாவட்டம் திட்டச்சேரி மன்சூர் அவ்லியாவின் வருடாந்தர விழாவை வெகுவிமரிசையாக நடத்துவார்கள் அந்த ஊர் அவ்லியா பக்தர்கள்.நாகூரைப் போன்று உரூஸ் நடத்த நம்மிடம் அவ்லியாக்கள் இல்லையே என்று தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட அவலியா தான் மகான் மன்சூர் அவ்லியா. அப்படி ஒரு மனிதர் அந்த ஊரில் வாழ்ந்ததாக வரலாறே இல்லையாம். இன்று இந்த அவ்லியா பெயரில் அர்ச்சனைகள்!ஆராதனைகள்! ஆடல் பாடல்கள்! அமர்க்களமாக நடைபெறுகிறது.
1977ல் அந்த ஊருக்குச் சென்றபோது நம்மை வரவேற்றதே அந்த அவ்லியாவின் உரூஸ் விளம்பரம் தான்! அது தான் கிளைமேக்ஸ்! அந்த விளம்பர அழைப்பிதழ் வாசகங்கள் என்ன தெரியுமா ?
மன்சூர் அவ்லியாவின் ஆசி பெற வெண்ணிற
ஆடை நிர்மலாவின் நடன நிகழ்ச்சி காண வாரீர்!
இந்த விளம்பர நோட்டீஸைப் பார்த்ததும் அதிர்ந்து விட்டோம்.
சமுதாயம் எங்கே சென்றுவிட்டது பர்hத்தீர்களா?
அவ்லியாவின் மாண்பைப்பெற திரைப்படங்கள்!கரக ஆட்டங்கள்!
சோலியக்குடி என்னும் முத்துவடுகநாத பட்டணம் செய்யது முஹம்மது வலியுல்லாஹ் அவர்களின் 56-வது ஆண்டு சந்தனக்கூடுவிழா! ஹிஜ்ரி 1403 ஜமாதுல் அவ்வல பிறை 19 (4.3.83) வெள்ளி பினனேரம் சனி இரவு சந்தனக்கூடு விழா அதிவிமரிசையாக நடைபெறும்.
அன்று இரவு 10 மணியளவில் இரண்டு திரைப்படங்கள்
இலவசமாகக் காண்பிக்கப்படும். (பெண்களுக்கு தனி இடம் உண்டு)
அன்று இரவு 7 மணியளவில் கரக ஆட்டமும் உண்டு.
இப்படிக்கு தர்ஹா கமிட்டியார், சோலியக்குடி எம்.வி.பட்டணம்.
அவ்லியாவின் ஆசியைப் பெற இத்தனை அம்சங்களும் இடம் பெறவேண்டுமாம். எப்படி அவ்லியாவின் மீது நம்பிக்கையை வளர்த்துவைத்திருக்கிறார்கள் பாருங்கள். அவ்லியாவுக்கும், திரைப்படத்துக்கும், கரக ஆட்டத்துக்கும் என்ன தொடர்போ? எப்படிப்பட்ட சம்மந்தத்தைப் பிணைத்து வைத்திருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்தாலே மார்க்கத்தை எந்த இலட்சணத்தில் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது புரியவரும்.
அவ்லியாவின் ஆசிபெறும் சிவப்பு விளக்குக் கன்னியர்!
இதயமே வெடித்து விடும் போலிருந்தது அந்த ஆபாசக் காட்சியைக் கண்டதும்! வேறு எங்கும் அல்ல. சுல்தானுல் ஆரிபீன் நாகூர் நாயகத்தின் தர்கா வளாகத்தில் தான்! 1960ல் நாகூரில் என்ன நடைபெறுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள சாபு குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் ஆசிரியரின் தம்பி என்னை வளாகத்தின் உள்ளே நடக்கும் ஆபாசங்களை விவரித்து வந்தார். அங்கே வடிவமைக்கப்பட்ட சில டென்டுகளின் முன் அரை நிர்வாணத்தில் தங்ளை அலங்கரித்துக்கொண்டு நிற்கும் இளம் குமரிகள் சிலர் அங்கே நின்று கொண்டிருந்தனர். திடுக்கிட்டவனாக இவர்கள் யார்? எதற்காக இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள் ? எனக் கேட்டபோது வாடிக்கையாயர்களை எதிர்பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள் என்றார் அந்த நண்பர். அவ்லியா கண்டு கொள்ளாமல் அனுமதிக்கிறாரே ! இவருக்கு இந்த அசிங்கத்தை தடுப்பதற்கோ இந்த வேசிகளை அழிப்பதற்கோ சக்தியில்லையா ? எனக்கேட்டபோது இது இங்கே சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது என்றாரே பர்க்கலாம். அன்றுதான் அவ்லியாவுக்கு ஆக்கவோ அழிக்கவோ சக்தியில்லை என்ற முடிவுக்கு வந்தேன்.
விண்ணுயர அவ்லியாவின் கப்ருஸ்தான்!
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் உலகிலேயே ஒரு வித்தியாசமான கப்ருஉள்ளது. அது மேற்கூரையை முட்டும் வண்ணம் மிகஉயரமாகக் கட்டப்பட்டுள்ளது. ஏன் இந்த கப்ருமட்டும் இவ்வளவு உயரமாகக் கட்டப்பட்டுள்ளது என அதன் ஆதீன கர்;த்தாவான மக்காமு இலப்பையிடம் 1958-ம் ஆண்டு நாம் கேட்டபோது ‘இது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். இது வளர்ந்துகொண்டேஇருக்கும்.வளர்ந்து வளர்ந்து விண்ணை முட்டும் போது கியாமத் நாள்-மறுமை நாள்- வந்துவிடும் என்றார்.   
அவர் காலமான பிறகு அவரது மகனார் தந்தையின் பதவிக்கு வந்தார். அவரிடம் இது பற்றி விசாரித்தபோது “அப்படி மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” எனக் கூறிவிட்டார். இப்போது அவரது பேரரைக் கேட்டால் “இதுவெல்லாம் போலியான செய்திகள்” என விளக்கமளித்தார். ஆதீன கர்த்தாக்களான அவரது குடும்பத்தாரே இந்தப் பொய்ச் செய்திகளை நம்பமுடியவில்லை. இருந்தும் பொய்களைப் பரப்பி மக்களை வழி கெடுத்து வருகின்றனர்.
வியாபாரி அவ்லியா
அவரே மாலிக் முஹம்மது ஒலியுல்லாஹ். இவர் யார் ? எந்த ஊர் ? எப்போது
பிறந்தார்? என்பது தெரியவில்லை. வியாபாராத்திற்காக வந்தவர் அந்த ஊரிலே இறந்து விட்டார். நல்ல மனிதராகத் தெரிந்ததால் அவரை அடக்கம் செய்து பெரிதாக கப்ரும் கட்டிவிட்டார்கள். பின்னர் அவரை ஒரு மகானாகச் சித்தரித்து “மெய்நிலை கண்ட ஞானி மஹான் மாலிக் முஹம்மது ஒலியுல்லாஹ்வாக” விளம்பரப்படுத்தி இன்று ஆண்டு தோறும் விமரிசையாக விழா நடத்தி வருகிறார்கள் அந்த ஊர் மக்கள்.
அவ்லியாக்களின் திரை கிழிகிறது.
அறிவுலகம் வெட்கித் தலைகுனிகிறது.
அவ்லியாக்கள் பெயரால்
அரங்கேறும் அவதாரங்கள் !
அவ்லியாக்களின் பெயரால் மக்கள் கண்மூடித்தனமான அனாச்சாரங்களை ஆங்காங்கே அரங்கேற்றி வரும் அவலங்களை நம்மைச்சுற்றிலும் பார்த்து வருகிறோம். குருட்டுத்தனமான பக்தியால் விவஸ்தையே இல்லாமல் அவ்லியாக்களின் இலக்கணம் தெரியாமல் யார் யாரையெல்லாம் அவ்லியாக்கள் (இறை நேசர்கள்) என கொண்டாடி வருகிறார்கள் தெரியுமா?
1. வாயில் போட்டு மென்ற வெற்றிலையால் பிள்ளை வரம் கொடுப்பவர் அவ்லியா !
2. எச்சிலைத் தண்ணீரில் துப்பி வேண்டியது நடக்க துப்பிக்கொடுப்பவர் அவ்லியா !
3. பச்சைத் தலைப்பாகை,நீண்ட அங்கி, ஜபமாலை சகிதம் உலா வருவோர் அவ்லியா!
4. மாந்திரீகம்,இஸ்மு,தகடு,தாவீஸ்,இலை,பீங்கான் என ஏமாற்றும் தங்ஙள்கள் அவ்லியா!
5. தர்காக்களின் ஆதீன கர்த்தா, அவ்லியாவின் வாரிசு என வசூலுக்கு வருவோர் அவ்லியா!
6. செய்கு முஹ்யித்தீன், நாகூர் நாயகம் பரம்பரை என தம்பட்டம் அடிப்போர் அவ்லியா!
7. குழி தோண்டி (துணி நெய்யும் குழியில்) கஃபாவை காண்பவர் அவ்லியா (பீரப்பா)
8. காமமோகம் கொண்டு பெண்களை தனிஅறையில் சந்தித்து முரீதுகொடுப்பவர் அவ்லியா!
9. பெண்களையும் ஆண்களையும் தடவிக்கொடுத்து ஓதி ஊதுபவர் அவ்லியா!
10. நிர்வாண கோலமாக அலையும் சன்னியாச பரதேசிகள் அவ்லியாக்கள் !
11. கஞ்சா அபின் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் அவ்லியாக்கள்!
12. இரவெல்லாம் கேளிக்கைகளிலும், சல்லாபங்களிலும் ஈடுபட்டுப் பகலிலே பத்தினிகளாக
நடிப்போர் அவ்லியாக்கள்!
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே!நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும்
(திருக் குர்ஆன் 7:194)
ரபீவுல் ஆகிர் மாதம் பிறந்து விட்டது. முஹ்யித்தீன் ஆண்டவர்(?) பிறந்த நாள்விழா கொண்டாட்டங்கள் குதூகலத்துடன் தொடங்கப்போகின்றன. இதயத்தில் இதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச ஈமானும் கொடிமரங்களில் இனி தஞ்சமடையப் போகின்றன. (நவு+து பில்லாஹ்) அல்லாஹ் நம்மைக் காப்பானாக.
தூய இஸ்லாத்தில் இல்லாத திருவிழாக்களும் வழிகேடுகளும் மாற்றார் எள்ளி நகையாடும் விதத்தில் முஸ்லிம்கள் என்று தம்மை கூறிக் கொள்பவர்களால் இன்னமும் அரங்கேற்றப் படுவதைக் கண்டு நம் நெஞ்சு பொறுக்குதில்லையே!
   அவ்லியாக்கள் பெயரால் அரங்கேறும் அநாச்சாரங்களில் முஹ்யித்தீன் அப்துல்; காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயரால் நடக்கும் அநாச்சாரங்கள் தான் கொடுமையிலும் கொடுமை.
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கட்டப்பட்டுள்ள தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்கள் பெயரால் நடக்கும் அநாச்சாரங்கள் அந்தந்த ஊர்களில் தான் நடக்கின்றன. ஆனால் தமிழகமெங்கும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயரால் நடக்கும் கேளிக் கூத்துக்கள் சொல்லி மாளாது.
ரபீவுல் ஆகிர் மாதம் வந்து விட்டால் அப்துர; காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயரால் பள்ளிகள் தோறும் பரவசமாக முஹ்யித்தீன் மௌலிது ஓதப்படுவது ஷிர்க்கின் உச்சக் கட்டம்.
அல்லாஹ்வை வணங்க கட்டப்பட்;ட பள்ளிவாசல்கள் என்னும் இறையில்லங்களில் அல்லாஹ்வை அழைத்துப் பிராh;த்திப்பதை விட்டு விட்டு ஒரு மனிதரை அழைத்துப் பிரார்த்திப்பது பச்சையான ஷிர்க் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? இதை உணர மாட்டீர்களா?
பக்திப் பரவசத்துடன் அர்த்தம் புரியாமல் ஓதிக் கொண்டிருக்கிறீர்களே! அதை ஓதிக் கொண்டிருக்கும் மௌலவி மார்களிடமே அதன் அர்த்தத்தைப் கேட்டுப் பாருங்கள் அப்போது தான்; அது எவ்வளவு பெரிய ஷிர்க் என்பதை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.
நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளையே கொண்டாட மார்க்கத்தில் அனுமதி இல்லாத போது, அவர்களை தம் உயிரினும் மேலாக மதித்த சத்திய சஹாபாக்கள் கொண்டாடாத போது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது மிகப் பெரும் வழிகேடல்லவா?
நான்கு கொடியை பக்தி சிரத்தையுடன் தூக்கி ஊர்வலம் செல்வதும் அதைத் தொட்டு முத்தமிடுவதும், அதற்காக நேர்ச்சை செய்வதும் இவை யாவும் நரகப் படுகுழியில் கொண்டு போய்ச் சேர்க்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
இஸ்லாம் நமக்கு வழங்கிய இரு பெரு நாட்களையும் விடச் சிறப்பாகவும் குதூகலமாகவும் இந்தக் கொடிச்சீலைத் திருவிழாவைக் கொண்டாடும் நெஞ்சங்களே அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்களா?
இஸ்லாம் அனுமதித்த  இரு பெருநாட்களுக்காகக் கூடத் தங்கள் அரபு நாட்டு விடுமுறையைத் தள்ளிப் போடாதவர்கள் இந்த அநாச்சார விழாவுக்காக உங்கள் விடுமுறையை மாற்றி அமைத்து இஸ்லாத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறீர்களே!
ஏகத்துவப் பிரச்சாரங்கள் தினந்தோறும் உங்கள் செவிகளை வந்தடைந்த போதும் அவற்றைத் துச்சமென மதித்து இன்னும் கெடுவேன் என்ன பந்தயம்?’ என்ற பாணியில் நரகப்படுகுழியை நோக்கி வெகு வேகமாகப் பயணிக்கின்றீர்களே! கொழுந்து விட்டெரியும் அந்த நரக நெருப்பை அஞ்சமாட்டீர்களா?
அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் மீது காட்டும் பாசத்தையும்  நேசத்தையும் அண்ணல் நபி (ஸல்) மீது காட்டுங்கள். அல்லாஹ்வின் அன்பைப்  பெறுவீர்கள். இல்லையேல் அண்ணல் நபி (ஸல்)அவர்களின் உம்மத்திலிருந்து அப்புறப்பட்டு போவீர்கள்.
அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் மீது காட்டும் பக்தியையும் சிரத்தையையும் அல்லாஹ்வின் மீது காட்டுங்கள் இல்லையேல் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.
நன்மையும் தீமையும் மார்க்கத்தில் தெளிவாக்கப் பட்டுவிட்டன. தீயவை எவை என்பதில் நமக்கு குழப்பமில்லை. ஆனால் நன்மை என கருதிக் கொண்டு தீமையைச் செய்தால் ஏற்படும் இழப்பு தான் உண்மையில் பேரிழப்பாகும்.
 அறிந்துக் கொண்டே பயணச்சீட்டு பெறாமல் பயணம் செய்பவன் பிடிபட்டு தண்டிக்கப்பட்டால் அது நியாயம் தான். ஆனால் பணம் கொடுத்து பயணச்சீட்டு பெற்று மிகவும் ஆடம்பரமாகப் பயணத்தை மேற்கொள்ளும் போது பரிசோதனையில் அது போலியானது எனத் தெரிய வந்து நீங்கள் தண்டிக்கப்பட்டால் எவ்வளவு வேதனைப்படுவீர்கள்?
அறிந்து கொண்டே தவறுகளைச் செய்தவன் நாளை மறுமையில் தண்டிக்கப்படுவது உறுதி. நன்மையையும் தீமையையும் பிரித்தறியும் உரைகல்லாக அல்லாஹ்வின் திருமறையும் அவனது திருத்தூதரின் வழிகாட்டுதல்களும் தௌ;ளத் தெளிவாக நம் முன்னே இருக்கும்போது அவற்றை ஏரெடுத்துப் பார்க்காமலும், செவி தாழ்த்திக் கேட்காமலும் முன்னோர்கள் காட்டிய வழிஎன்று அநாச்சாரங்களிலும், வழிகேடுகளிலும் பிடிவாதம் காட்டுவீர்களானால் அல்லாஹ்வின் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும்.
இது நாள்வரை அறியாமையினால் இந்த கொடிச்சீலை விழாவைக் கொண்டாடி இருந்தால் அறியாமல் செய்த பாவங்களுக்காக அல்லாஹ்விடம் அழுதழுது மன்னிப்புக் கேளுங்கள். இந்த அநாச்சார விpழாவை இனி கொண்டாடுவதில்லை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சபதம் செய்யுங்கள்.
அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு அதன் பின்னர் மன்னிப்புக் கோரி திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான். அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன்.
(திருக் குர்ஆன் 16:119)

 தமிழகத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் ஹிஜ்ரி மாதக் கணக்கை நன்கு நினைவு வைத்திருப்பர். ஆனால் அவர்களுக்கு அரபு மாதங்களின் பெயர்கள் தெரியாது. இதற்குக் காரணம் அவர்கள் அந்தந்த மாதத்தில் நடக்கும் அவ்லியாக்களின் கந்தூரிகளை வைத்து மாதத்தைக் கணக்கிடுவது தான்.

ரசூலுல்லாஹ் மவ்லிது (ரபிய்யுல் அவ்வல்), முஹ்யித்தீன் மவ்லிது (ரபிய்யுல் ஆகிர்), பஷீரப்பா கந்தூரி (ஜமாதில் அவ்வல்), ஷாகுல் ஹமீது மவ்லிது (ஜமாதில் ஆகிர்), காஜா நாயகம் மவ்லிது (ரஜப் மாதம்) என அவ்லியாக்களின் பெயரிலேயே மாதப் பிறையைக் கணக்கு வைத்திருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு அவ்லியாக்களின் கந்தூரிகள் அவர்களை ஆக்கிரமித்து நிற்கின்றன.

 தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர். இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறை வேற்றாதவர்கள் கூட இந்த மவ்லிதுகளைப் பாடுவதை மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிருந்து இதை அறியலாம்.




அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

தஞ்சை (தெற்கு) மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் தொடங்;கப்பட்ட காலத்திலிருந்து நீண்டகாலமாக பள்ளிவாசல் கட்டப்படாமலேயே ஏனைய பள்ளிவாசல்களில் தவ்ஹீது சகோதரர்கள் தொழுது வந்தனர். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கவும் நேரிட்டது எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும் சகித்துக் கொள்வோம் என்ற சிந்தனையில் தனிப் பள்ளிவாசல் அமைக்கப்படாமல் தொழுது வந்தனர்.

ஆனாலும் அதிகபமட்சமான மக்களின் உள்ளங்களில் தனிப் பள்ளிவாசல் அமைக்க வேண்டும் என்ற சிந்தனை நாளுக்கு நாள் மேலோங்கியதால் அதனடிப்படையில் நிலம் வாங்கப்பட்டு அதில் கீற்றுக் கொட்டகை அமைத்து தொழுகை நடந்து வருகிறது.

பள்ளிவாசல் அமையப்பெற்ற இடம் ஈ.ஸி.ஆர். ரோடு என்பதால் பலமானக் காற்றுக்கு அதன் கீற்றுகள் தாக்குப்பிடிக்க முடியாததால் அடிக்கடி கீற்று மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது இதில் கனிசமானத் தொகை செலவாகின்றது. கடந்த வருடம் கீற்று மாற்றும் முழு செலவையும் இப்போதைய மாவட்டத் தலைவர் சகோ: ஒய்.அன்வர் அலி அவர்களே ஏற்றுக் கொண்டார்கள். இந்த வருடத்து நிலை என்ன வென்றுத் தெரியவில்லை.

இதற்கடுத்து பள்ளிவாசலில் ஜூம்ஆத்தொழுகைக்காக மக்கள் கூட்டம் வாரத்திற்கு வாரம் கூடிக்கொண்டே செல்வதால் கடும் வெயிளில் பள்ளிவாசலுக்கு வெளியில் மக்கள் நின்றுத் தொழுவதால் பள்ளிவாசலை கட்டிடமாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் முழு விபரங்களையும் கீழ்காணும் லிங்கை சொடுக்கிப்பார்வையிடவும்.
 http://adirai-tntj.blogspot.com/p/blog-page.html

அல்லாஹ்வின் பள்ளிவாசலை அமைப்பதற்கு இறையச்சமுடையவர்கள் தாராளமாகப் பொருளாதார உதவி செய்வதற்கு முன்வருவதன் மூலம் இறையருளுக்கு நெருக்கமானவர்களாகவும், சுவனத்தில் தங்;கள் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும் பாக்கியம் பொருந்தியவர்களாகவும் ஆவார்கள்.

யார் அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டுகிறாரோ அவருக்கு சொர்க்கத்தில் அல்லாஹ் அது போன்ற (கட்டிடத்) தை கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உஸ்மான் (ரலி)

திர்மிதி 292


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்


"உயிருள்ளவர்களுக்கும் கத்தம் கொடுக்கலாம்"
மாத்தளை விவாதத்தில் நிலைதடுமாறிய மௌலவி அப்துல்லாஹ் ஜமாலி


2010-03-07 அன்று மாத்தளை நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற ஒருநாள் விவாதம் தௌஹீத் கொள்கைப்பிரச்hரத்தில் ஒரு முக்கியம் வாய்ந்த நிகழ்வு எனலாம்.

இலங்கையின் தௌஹீத் பிரச்சாரம் 60 வருடங்களைத் கடந்துகொண்டிருக்கிறது.இந்தப் பிரச்சாரத்தின் வளர்ச்சியில் பல ஜமாஅத்துக்கள் பல உலமாக்கள் பங்காற்றியிருக்கிறார்கள்.பிரச்சாரத்தின் ஆரம்பந்தொடக்கம் தௌஹீதிலும் ஸ{ன்னாவைப் பின்பற்றுவதிலும் சிர்க் பித்அத்களை பிரச்சாரத்தால் எதிர்ப்பதிலும் காட்டிய உறுதியான நிலைப்பாடு சமரசம் செய்துகொள்ளாத்தன்மை இந்த கொள்கையின் பக்கம் பலரை ஈர்த்தது.பல இழப்புக்களை இந்தக் கொள்கையின் நகர்வு சந்தித்தது.உயிரிழப்பு ஊர் நீக்கம் வெட்டுக்காயங்கள் அவதூறுகள் என்று அராஜகத்தின் பட்டியல்கள் நீண்டது.ஆனால் அவைகளுக்கெதிராக உயிர்த்தியாகம் செய்வதற்குத் தயாராக பலர் இருந்தும் தௌஹீத் பிரச்சார அமைப்புகள் வன்முறைகளில் இறங்கவில்லை.மாறாக பிரச்சாரத்தை தீவிரப்படுத்திக் கொண்டே இருந்தனர்.1980களில் மௌலவி பீஜே அவர்களின் தவ்ஹீத் பிரவேசத்தோடு தமிழுலக தவ்ஹீத் அமைப்புக்களின் பிரச்சாரம் புது வேகம் அடையத்துவங்கியது.பலவிவாத மேடைகளை பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தௌஹீத் அமைப்புக்கள் சந்தித்தன.பலர் தவ்ஹீத் கொள்கையின் பால் ஈர்க்கப்பட ஆரம்பித்தனர்.

ஆனால் எதிர்ப்புக்கள் குறையவில்லை.கருத்தைக் கருத்தால் வெல்ல முடியாதவர்கள் அராஜகங்களைக் கட்டவிழ்த்துவிடும் முறைகளில் வளர்ச்சியடைந்தார்கள் பன்முகப்பட்டார்கள். அதன் விளைவாக தௌஹீத்வாதிகள் என்றுமே சந்தித்திராத , இலங்கை வரலாறு என்றும் மறக்காத ஒரு கொடூர நிகழ்வை மஹகொடை தவ்ஹீத் சகோரர்கள் சந்தித்தார்கள்.இருளுக்குள் பல உடல்களின் சிவப்பு இரத்தம்; மஸ்ஜித் மண்ணிலே வழிந்தோடியது. பல உடல்கள் கதறக் கதற சிதைக்கப்பட்டன.அல்குர்ஆன் பிரதிகள் தீக்கிரையாக்கப்பட்டன. மஸ்ஜித் எரிக்கப்பட்டது. கொடூரம் கொடூரத்திலும் கொடூரம்.ஆனால் உரிய நீதி வழங்கப்படவில்லை.படுகொலைகளையெல்லாம் அரங்கேற்றிய பின் கொல்லப்பட்ட பிராபகரனுக்காக கவலைப்பட்ட முஸ்லிம் அமைப்புகள் கூட இதற்காகக் கவலைப்படவில்லை.நீதி பேச வேண்டிய பொது இயக்கங்கள் எனச் சொல்லிக் கொள்ளக் கூடிய இயக்கங்கள் வேற்றுமையில் ஒற்றுமை என தௌஹீத் பிரச்சாரகர்களை எதிர்க்க ஒன்று திரண்டனர்.படுகொலையின் கொடுமை பற்றிப் பேச வேண்டிய உலமாக்கள் நாவடக்கம் பேச்சொழுக்கம் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

இதன் விளைவாய் நம் சகோதரர்களில் சிலர்; அச்சத்தாலும் சிலர் அவசரத்தாலும் சிலர் சமரசத்தாலும் கொள்கையிலும் அதன்பால் அழைப்பதிலும் அமைதிகாக்க ஆரம்பித்தனர்.இதன்பின் என்ன நிகழுமோ!!!தௌஹீத் பிரச்சாரம் செய்ய முடியாமல் போவது மட்டுமல்ல பின்பற்றக் கூட சாத்தியப்படாமல் போகுமோ!!!என்ற அச்சம் பரவ ஆரம்பித்தது.இளம் உலமாக்களின் அறிவும் ஆற்றலும் தைரியமும் அனுபவமின்மை என அடையாளப்படுத்தப்பட்டது.

அப்படியான ஒரு சூழலில்தான் ……….

தமழுலக ஸ{பிகளின் தலைவரும் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமுமான கைருல் பரீயா அரபிக் கல்லுரியின் முதல்வர் ஜமாஅதுல் உலமா சபைத் தலைவர் மெலவி அப்துல்லாஹ் ஜமாலியுடனான விவாதம் ஒன்றிற்காய் முனாலிரு ஸைலான் மாத்தளை நஜ்முல் உலமா நஜாஹியா அரபுக்கல்லூரியின் முதல்வர் மௌலவி முஹாஜிரீன் தலமையில் தௌஹீத் உலமாக்களுக்கான அழைப்பு விடப்பட்டது.இதில் அப்துல்லாஹ் ஜமாலியின் வருகை விவாத நாள்வரை எமது தரப்பிற்கு உறுதியில்லாமலேயே இருந்தது.

அச்சம் நிறைந்த இந்தச் சூழலில்…….
கருத்துச்சுதந்திரம் வன்முறையால் எதிர்க்கப்படும் இக்கட்டத்தில்..

இன்னொரு இரத்தக் களத்தை உருவாக்கவா இந்த நிகழ்வு?இது தேவைதானா?என்ற திகிலூட்டும் ஓசைகள் ஒரு புறமிருக்க வருவது அப்துல்லாஹ் ஜமாலி என்று அவரது பெயரை உரத்துச் சொன்னவர்கள் மறுபுறம். கலியக்காவிலையின் விவாதத்தில் அவர் காணாமல் போனதைக் கண்டபின்னும் இந்த ஓசைகள் நமக்குக் கேட்டதுதான் ஆச்சரியமாக இருந்தது.ஆனாலும் மாத்தளைத் தவ்ஹீத் ஜமாஅத்தும் அக்குறனைத் தவ்ஹீத் ஜமாஅத்தும் இந்த முயற்சியில் பல எதிர்ப்புக்கு மத்தியில் தளறாது களமிறங்கின.உண்மைக்ககே வெற்றி உலமாக்களுக்கல்ல என்று உறுதியாக நம்பினர்


கருத்துச் சுதந்திரமில்லாத ஒரு வாழ்வை விட மரணம் சிறந்தது.
குர்ஆனையும் சுன்னாவையும் வாதம் ஒருபோதும் மிகைக்காது
என்ற முடிவுடன் 8 இளம் உலமாக்கள் களமிறங்கினார்கள்.5 பேர் விவாதம் புரிவதற்கும் 3 பேர் நூல் மற்றும் கணனி உதவிகளுக்கும் தயாரானார்கள்.

1.மௌலவி முஜாஹித்
2.மௌலவி ஜாபிர்
3.மௌலவி ஸஹ்ரான்
4.மௌலவி அக்ரம் பாரி
5.மௌலவி முஹம்மத் நாஸர்
6;.மௌலவி ஸவ்ராஜ்
7.மௌலவி மஸ்ஊத்
8.மௌலவி ஸில்மி

அவர்கள் தரப்பில்

1.தமிழுலக ஸ{பிகளின் தலைவரும் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமுமான கைருல் பரீயா அரபிக் கல்லுரியின் முதல்வர் ஜமாஅதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி அப்துல்லாஹ் ஜமாலி

2.முனாலிரு ஸைலான் மாத்தளை நஜ்முல் உலமா நஜாஹியா அரபுக்கல்லூரியின் முதல்வர் மௌலவி முஹாஜிரீன்

மற்றும் இன்னும் மூன்று உலமாக்களும் விவாதத்தில் களந்துகொண்டனர்.


நமது தரப்பு வாதம்

1.கப்று ஸியாரத் என்ற பெயரில் சிர்க் மற்றும் பித்அத்துகள் நடக்கின்றன
2.இறந்தவர்களுக்கு கத்தம் கொடுப்பது இபாதத் கிடையாது அது பித்அத்தாகும்
3.தொழுகையின் பின்னர் கூட்டு துஆ இஸ்லாத்தில் உள்ளதல்ல.
4.சுபஹ் தொழுகையில் குனூத் ஓதுவது பித்அத் ஆகும்.

இவைகளில் முதலாவதாக கத்தம் பற்றிய தலைப்பே ஒப்பந்தத்தில் அவர்களால் முதன்மைப்படுத்தப்பட்டது.கடைசியில் அவர்களின் பயங்களந்த பிடிவாதத்தால் அந்த ஒரு தலைப்போடே விவாதம் முடிவுற்றது.

நமது சமூகம் 150 கோடிக்கு மேற்பட்டிருந்தும் பலவடிவங்களில் பல கோணங்களில் பிரிந்துபோய் சொந்த மண்ணையெல்லாம் அந்நியர்கள் ஆக்கரமித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும் இவர்கள் இந்த இணைவப்புகளிலும் பி;அத்துகளிலும் இன்னும் பிடிவாதம் காட்டி உம்மத்தைக் கூறுபோடுகிறார்களே இவர்கள் உண்மையை உணரமாட்டார்களா? என்ற கவலையும் இந்தத் தலைப்பில் நாம் விவாதிப்பதற்கான இன்னொருகாரணமாக இருந்தது.


நிலைதடுமாறிய மௌலவி அப்துல்லாஹ் ஜமாலி

1. 3ம் 7ம் 40ம் மற்றும் வருடக்கத்தங்கள் அந்த நாட்களில் கொடுக்கவேண்டுமென்பதில்லை அந்த நாட்கள் நாமாக வசதிக்காக உருவாக்கிக் கொண்டவைகள்.
2. இருட்டுக்கத்தம் கிடையாது.
3. உயிருள்ளவர்களுக்கும் கத்தம் கொடுக்கலாம்.(மௌலவி முஹாஜிரீன் மரணிக்கும் முன்னரே அவருக்காக கத்தம் கொடுக்க வாய்ப்புண்டு.
4. கத்த வீட்டில் சிரித்தும் பெற்றோர்களுக்கு அந்த நன்மையை சேர்க்கலாம்
5. இல்லறத்தில் ஈடுபடுவதும் தர்மம் என்பதால் அதன் நன்மையையும் கத்தம் எனலாம்
6. நபிகளார் தன் பிள்ளைகளுக்கோ தோழர்களுக்கோ கத்தம்கொடுக்கவில்லை என்பது உண்மைதான்….
7. உங்களில் மரணிப்பவர்களுக்கு யாஸீன் ஓதுங்கள் என்ற ஹதீஸை இமாம் நவவீ லஈப் என்று சொல்லியிருப்பது உண்மைதான் அவர் அதற்கான காரணம் சொல்லியிருப்பதும் உண்மைதான் ஆனாலும் அதனையும் ஏற்;க மாட்டோம்.
8. பொதுவாகக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள் மற்றும் தர்மம் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இவைகளை இணைத்துத்தான் கத்தம் என்ற இபாதத்தை உருவாக்கியுள்ளோம்.நேரடியாக கத்தம் என்ற வணக்கத்திற்கு ஆதாரம் இல்லை.
9. நாம் கத்தத்திற்கு ஆதாரமாக வைக்கும் ஹதீஸ்களிலெல்லாம் குறைகள் உள்ளன.மனிதன் என்றால் குறைவரத்தானே செய்யும்.
10. உஸ{லுல் ஹதீஸ் பற்றிய அறியாமைகள்.தடுமாற்றங்கள்,,,,,,,,,,,,,


என பல தடுமாற்றங்களால் நிலைகுழைந்துபோன மௌலவி அப்துல்லாஹ் ஜமாலியும் அவரது தரப்பினரும் பலவிதமாக விவாதத்pன் போக்கை திசை திருப்பப்பார்த்தனர்.குறிப்பாக மௌலவி முஹாஜிரீன் அவர்கள் திடீரென "இவர்கள் அல்லாஹ்விற்கு உருவம் கற்பிப்பவர்கள்" என தலைப்பிற்கு சம்பந்தமில்லாத ஒன்றை எறிந்தார்.மடக்கிப்பிடித்துக் கேட்டோம் அல்லாஹ்வை எப்படி நம்பவேண்டும்? என இந்த விவாத முடிவில் ஒப்பந்தம்போட்டு அத்தலைப்பில் விவாதம் செய்யத்தயாரா?என்று கேட்டோம். விவாத முடிவுவரை எந்த பதிலையும் காணவில்லை.அவர்கள் தரப்பு விவாத்தை ஆரம்பித்து 20 சுற்றுக்கள் பேசியிருந்தனர் நாம் 19 சுற்றுக்களே பேசியிருந்தோம்.எனவே தொகுப்புரையை நாமே துவக்க வேண்டும்.இருந்தும் முடியாது நாம்தான் துவக்குவோம் என பிடிவாதம் பிடித்தனர்.எமது தரப்பின் எல்லா ஞாயங்களைச் சொல்லியும் மௌலவி அப்துல்லாஹ் ஜமாலி அவர்களே அதுதான் ஞாயமென அவர்களுக்கு மத்தியில் மெதுவாய்ச் சொல்லியும் முஹாஜரீன் மௌலவி மறுத்துவிட்டார்.அதன் பின்னால் உள்ள நோக்கத்தைப் புரிந்துகொண்ட நாம் அதனையும் விட்டுக் கொடுத்தோம்.

பெரிய பெரிய ஆதாரங்களையெல்லாம் வைப்பார்கள் என எதிர்பார்த்துவந்த மௌலவி ஜமாலி தரப்பினருக்கு மிகப்பெரும் ஏமாற்றமாய் போனதை அவர்களின் பெரும்பாலானவர்கள் முகத்தில் அவதானிக்க முடிந்தது.மௌலவி அப்துல்லாஹ் ஜமாலி எங்களைக் காப்பாற்றுவார் என்று நம்பி வந்தவர்கள் கத்தம் சிலரின் பணவறுமையை நிவர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட ஒரு பித்அத் என்ற உண்மையை உணர்ந்திருப்பார்கள்.அல்லாஹ் உண்மையைக் காப்பாற்றுவான்.நாம் தவறான கொள்கையில் இருந்தால் நாம் நிச்சயம் நிலைதடுமாறுவோம் தோல்வியுறுவோம் நாம் சரியான கொள்கையில் இருந்தால் வெற்றிபெறுவோம்.இரண்டும் நாம் பேசுவது சத்தியமா?அசத்தியமா? என்பதைப் பொருத்தே என்று நம்பி வந்த நாம் வெற்றிபேற்றோம் அல்ஹம்துலில்லாஹ்.

அதே நேரம் எமது உயிரே போனாலும் நாம் விவாதம் செய்தே தீருவோம் என்ற எமது உறுதியில் நாம் உறுதியாகவே இருந்தோம் ஆதலால் எந்த வதந்திகளாலும் எம்மை அசைக்க முடியாமல் போனது.அதே நேரம் மாத்தளை ஸ{ன்னத் வல்ஜமாஅத் சகோரர்கள் எம்மோடு நல்ல முறையிலும் மரியாதையுடனும் நடந்துகொண்டனர்.கருத்தை கருத்தால் மட்டுமே எதிர்த்தனர்.எந்தச் சலனமும் இல்லாமல் விவாதம் இனிதே நிறைவுற்றது. அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்யவேண்டும்.

முஜாஹித் பின் ரசின்
முல்தகா அஹல் ஹதீஸ்
fromgn@googlegroups.com on behalf of Mohamed hussain Fazly (fazlylk@yahoo.com)
திருமண வைபவங்களில் இன்று மிக முக்கியமாக ஓதப்பட்டு வரும் “”நபிமார்களைப் போல் வாழ்க” என்ற வாழ்த்துத் தொடரின் பின்னணியைப் பலரும் புரியாது ஓதி அதற்கு ஆமீன் கூறி வருவதைப் பார்க்கிறோம். அதை ஓதாவிட்டால் திருமணமே கூடாது என்ற ஒரு மாயையே மக்களிடையே ஏற்படுத்தி விட்டனர். ஓதித்தான் தீர வேண்டுமென பிடிவாதம் பிடிப்போர் “அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம் வஹவ்வா வநூஹ் வ பாரிஸா வ இப்றாஹீம் வஸாரா வயூஸுஃப் வ ஸுலைஹா …” இவர்களைப் போல் வாழ்க என்ற வாழ்த்துவதின் பின்னணியைக் கவனியுங்கள்.
1. நபி ஆதம் ஹவ்வா போல் வாழ்க!
1. ஆதமும் ஹவ்வாவும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
2. இறைவன் தடுத்த சுவர்க்கத்துக் கனியை உண்டத ற்காக இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள்.
3.அதனால் சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு வீசப் பட்டார்கள்.
4.பின்னர் கணவனும் மனைவியும் பல்லாண்டுகள் பிரிந்து வாழ்ந்தார்கள்.
இந்த மணமக்களும் துன்பத்திற்கும், இறைக் கோபத்திற்கும் ஆளாகி பிரிந்து வாழ வேண்டுமா?
2.நபி நூஹும் ஃபாரிஸாவும் போல் வாழ்க!
நூஹு(அலை), லூத்(அலை) ஆகிய இருவருடைய மனைவியரும் நமது இரு நல்லடியார்ககளின் மனைவிகளாக இருந்தனர். அவர்களிருவரும் அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே (அந்த இறைத் தூதர்களால்) அவ்விருவரையும் இறைவனின் தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. இருவரும் நரகிற்குச் செல்வோருடன் சேர்ந்து நுழையுங்கள் என்று கூறப்பட்டது. (66:10)
இவ்வசனத்தின் மூலம் நூஹ் நபி, லூத் நபி இருவரின் மனைவியர் இருவருமே நரகவாசிகள் என மிகத் தெளிவாகவே குர்ஆன் அறிவித்து விட்டது. இவ்வசனத்தில் இரு நபிமார்களின் இரு மனைவியரும் இறை மறுப்பாளர்களாக இருந்து தங்கள் கணவர்களுக்குத் துரோகம் செய்து நரக வாசியாகவும் ஆகிவிட்டதை இறைவன் உலகோருக்குப் பிரகடனப்படுத்துகிறான். இதைத் தெரிந்தும் நரகவாசியான மனைவியோடு வாழ்வது போல் வாழ்க என வாழ்த்தலாமா?
3. நபி இப்றாஹீம், ஸாரா போல் வாழ்க!
இப்றாஹீம் நபி-ஸாரா தம்பதியருக்கு நீண்ட நெடுங்காலமாகவே (முதுமை வரை) குழந்தைப் பேறே இல்லாதிருந்தது.
எனது கேடே! மாதவிடாய் நின்று நான் கிழவியாகவும் எனது கணவர் வயோதிகராகவும் இருக்க நான் (கர்ப்பமாகி) பிள்ளை பெறுவேனா?
நிச்சயமாக இது ஆச்சரியமான விசயம் என்று அவரது மனைவி கூறினார் என அல்குர்ஆன் 11:71,72 கூறுகிறது.
வயது முதிர்ந்து கிழப்பருவம் வரும் வரை குழந்தைப்பேறே இல்லாதிருந்ததைத்தெரிந்தும் இவ்வாறு வாழ்த்தலாமா? எந்தத் தம்பதியர் வயது முதிரும்வரை குழந்தைப் பேறில்லாதிருப்பதை விரும்புவர்? ஆசையோடு எதிர்பார்க்கும் புதுமணத் தம்பதியரை இப்படி வாழ்த்தலாமா?
4. நபி யூஸுஃப்-ஸுலைஹா போல் வாழ்க!
1. குர்ஆனிலோ ஹதீஸிலோ ஸுலைஹாவைப் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை. இந்த ஸுலைஹா யார்?
2. அறிமுகமே இல்லாதவரை மனைவியாக்க முன் வந்தது எப்படி?
3. குர்ஆனில் யூஸுஃப் நபியை அடிமையாக வளர்த்தவர் தான் பிற்காலத்தில் நபியின் மனைவியாக சித்தரிக்கப்படுகிறார். அது எப்படி?
அல்குர்ஆனே இவள் தவறு செய்து விட்டாள் என வர்ணிக்கிறது. தவறு செய்தவள், முன்னைய கணவனுக்குத் துரோகம் செய்தவள் நபியின் மனைவியாக முடியுமா?
4. இவளை நபியுடன் இணைத்து ஓர் காதற் காவியம் இயற்றியது அபாண்டமான பழியல்லவா?
5. திருமணம் நடந்ததாக ஆதாரமே இல்லாத ஒருவளை- ஒரு தம்பதியை குறிப்பிட்டு வாழ்த்தலாமா? இது முறையா?
பல தீமைகளைத் தொடர்ந்து செய்த ஒரு பெண்ணை ஒரு நல்லடியாருக்கு அதுவும் ஒரு நபிக்கு மனைவியாக்க வேண்டுமென்ற நிர்பந்தம் என்ன?
6. இன்னொருவரின் மனைவியை அதுவும் வயது முதிர்ந்த கிழவியை கன்னிப் பெண்ணாக உருமாற்றி திருமணம் செய்து வைக்க வேண்டுமென்ற அவசியம் என்ன?
7. அப்படி ஒரு அதிசயம் நடந்திருந்தால் அதை அல்லாஹ் குர்ஆனிலேயே அறிவித்திருப்பானே?
8. அஹ்ஸனுல் கஸஸ்-அழகிய வரலாறு என்று கூறி ஒரு அத்தியாயம் முழுவதிலும் யூசுஃப் நபியின் அற்புத வரலாற்றை சுவைபட பிறப்பு முதல் இறுதி வரை கூறிய இறைவன் இதை எவ்வாறு கூறாது விட்டிருப்பான்?
இவ்வளவு பிரச்சனைக்குரிய விசயத்தை கட்டாயமாக அதுவும் மகிழ்ச்சிகரமான மண விழாவில் புதுத் தம்பதியை வாழ்த்துவதற்காகக் கூறித்தான் ஆக வேண்டுமா? மார்க்க ஞானமுள்எவரும், மார்க்கத்தைத் தெரிந்து கொள்ள விரும்புபவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
இந்த துஆவை ஓதாமல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த “பாரகல்லாஹுலக வ பாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீகைர்’-அல்லாஹ் உங்களுக்கு உள்ளும் புறமும் அருள் புரிந்து நல்லக் காரியங்களில் உங்கள் இருவரையும் ஒன்றிணைத்து வைப்பானாக… (நபிவழி துஆ அபூஹு ரைரா(ரழி) அறிவிக்கும், இந்த ஹதீஸ் அஹ்மத், அபூ தாவூத், திர்மிதி, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)
இந்த துஆவை மட்டும் ஓதினால் திருமணம் தடுக்கப்பட்டதாகி விடுமா? இல்லை பாவமான காரியமாகி விடுமா? இல்லை அல்லாஹ்வால் இந்த நிக்காஹ் புறக்கணிக்கப்பட்டு விடுமா?
(மவ்லவிகளை பதில் சொல்லுங்கள். இப்போதாவது உங்களுக்கு அச்சம் ஏற்படுகிறதா?)
ஒருபோதும் இல்லை என்பது அறிவு ஜீவிகளுக்கு நன்றாகவே புரியும். அப்படி இருந்தும் பல விதமான குழப்பங்கள் அடங்கிய-ஏன் குழப்பங்களே இல்லாமல் மிகவும் தெளிவாக (அல்லாஹ்வால் குர்ஆனிலே அவர்களைப் பற்றி சொல்லப்பட்டு) தவறு என்று விளங்கக் கூடிய இந்த பாவமான சாபக்கேட்டை நாமாகவே கேட்டுப் பெற்றுக் கொள்வதா?
அறிவு ஜீவிகள் புகுந்து பிரித்து அறியக்கூடிய ஜீவிகள் கேட்கிறார்கள். பல ஆண்டு காலமாக யாரும் இந்த துஆக்களை கேட்கவில்லையா? அவர்கள் எல்லோரும் நாசமாகி வாழ்க்கையில் சந்தோசமே இல்லாமல் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கி றார்களா? அவர்கள் ஒன்று சேர்ந்து வாழாமல் தான் போய்விட்டார்களா? அல்லது குழந்தை பாக்கியம் தான் இல்லாமல் போய்விட்டதா என்று? இது ஷைத்தான் அழகாகக் காட்டும் கேள்வியாகும். உங்களுக்கு நன்றாகவே தெரியும் கேட்கின்ற துஆக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்று; அதே வேளை சிலபேரின் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படவும் செய்கிறது என்று. இங்குதான் நீங்கள் சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும். நீங்கள் கேட்கக் கூடிய அந்த (சாபக் கேடான) பத்துஆவை சில நேரம் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவும், மறுக்கவும் செய்கிறான்.
அப்படி இருக்க சாபக்கேடான இந்த துஆவால் நாசமானவர்களும் இருக்கலாம், மேலும் அல்லாஹ்வால் இந்த (சாபக்கேடு) பத்துஆ புறக்கணிக்கப்பட்டு நன்றாக இருப்பவர்களும் இருக்கலாம். இந்த சாபக்கேட்டை நாமாகவே கேட்டு பெற்றுக் கொள்வதை விட்டுவிட்டு இனிமேலாவது அல்லாஹ்வும் ரசூலும் கற்றுத்தந்த வழியில் துஆக்களை கேட்டு நன்மையைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்களேன். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.
ஆசிரியர் குறிப்பு: அல்லாஹ்விடம் கேட்கும் துஆவின், இறை நினைவு கூர்தலின் (திக்ரின்) வரையறை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அல்குர்ஆன் 7:55,205 திட்டமாகக் கூறுகின்றன. அவை வருமாறு:
(முஃமின்களே) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும் அந்தரங்கமாகவும் (துஆ) பிரார்த்தனை செய்யுங்கள், வரம்பு மீறுகிறவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை (7:55)
(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்கப் பணிவோடும், அச்சத்தோடும் உரத்த சத்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனை நினைவு கூறுவீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம் (7:205)
துஆவுக்குரிய அல்லாஹ்வின் நிபந்தனை: துஆ பணிவாகக் கேட்கப்பட வேண்டும். பணிவின்றி சப்தமாகக் கேட்பதே முதல் குற்றம்; வரம்பு மீறிய செயல். அல்லாஹ்வின் நேசத்தைப் பெற முடியாது. நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் வாழ்ந்து சென்ற நபிமார்களை இழுத்து இவர்கள் கேட்கும் துஆ நல்ல துஆவாக அல்லாஹ்வால் ஏற்கப்படுவதாக இருந்தால் நிச்சயமாக நபி(ஸல்) அதைக் கற்றுத் தந்திருப்பார்கள். மறைத்திருக்க மாட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத இந்த துஆ சிறந்த துஆ என்றால், நபி(ஸல்) தனது தூதுத்துவப் பணியை முழுமையாக நிறைவேற்றவில்லை என நபி(ஸல்) மீது குற்றம் சுமத்துகிறார்கள். தனது கண்காணிப்பில் தூதர் இருந்தார் என்று அல்லாஹ் 52:48ல் கூறி இருந்தும் நபியை எச்சரித்து இவர்கள் ஓதும் இந்த துஆவை கற்றுக் கொடுக்கும்படி கட்டளையிடத் தவறிவிட்டான் என்று அல்லாஹ்வையும் குற்றப்படுத்துகிறார்கள். 42:21, 49:16 இறைவாக்குகள் சொல்வது போல் இவர்களை அல்லாஹ்வுக்கு இணையாளர்களாகி இவர்களாக இந்த துஆவை கற்பனை செய்து அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
எனவே இது தெளிவான பத்துஆ (கெட்ட பிரார்த்தனை) அல்லாமல் துஆ அல்ல.இதை நன்கு அறிந்த நிலையில் மவ்லவிகள்(?) நபி(ஸல்) கற்றுத் தந்த மிக சுருக்கமான மேலான துஆவை அனைவரும் எளிதாக ஓத முடியும் என்பதால், தங்களுக்குக் கை மடக்கு (கூலி) கிடைக்காது என்ற பயத்தினாலேயே மிக நீண்ட இந்த பித்அத் (கெட்ட) பத்துஆவை இறையச்சமின்றி அரங்கேற்றி வருகிறார்கள்.
இறை தியானத்திலும் அல்லாஹ்வின் 7:205 கட்டளையைப் புறக்கணித்து நிராகரித்து விட்டு (2:39) கூட்டாக கும்மாளமிட்டு, சப்தமிட்டுக் கூத்தடிப்பதை திக்ர், இருட்டு திக்ர் என மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மக்கள் பணத்தை ஹராமான வழியில் சாப்பிடுகிறார்கள். மக்கள் பணத்தை ஹராமான வழியில் கொள்ளை அடிக்கிறார்கள்.